Wednesday, February 17, 2010

அடையாளப்படுத்துதலில் நெருக்கடி - Identification Crisis Tamil

அடையாளப்படுத்துதலில் நெருக்கடி, ஞானஸ்நானத்தை மிகைப்படுத்தி கிறிஸ்து இயேசுவின் பூரண செயலை மிகவும் குறைத்து மதிப்பிடும் மக்களுக்கும், ஞானஸ்நானத்தை மிகவும் தவறாக பயன் படுத்துபவருக்கு மட்டுமே. நாம் சிறுகவும் அவர் பெறுகவும் என்ற சத்திய வாக்கு இந்த பகுதியில் மேன்மையானதாயிருக்கும்.

இந்த நாட்க்களின் ஆவிக்குரிய காரியங்களை பார்க்கும் போது மதத்தையும் வெளியரங்கமான சாக்கிரமந்துக்களையும்தான் மிகைப்படுத்துகிறார்களே தவிர மெய் சத்தியத்தை அறிய வேண்டுமே என யாரும் வருத்தப் படுவதில்லை. மெயின் லைன் சபைகள் அனுசரிக்கும் ஞானஸ்நானத்தில் சத்தியம் இல்லை என்று பெந்தேகோஸ்த்தே காரர்கள் அவர்களை குறை கூறி, அவர்கள் செய்வது பாரம்பரியம் - அது சத்தியமில்லை என்கிறார்கள்.

முழுகி ஞானஸ்நானம் எடுப்பது வேதத்தின் படி சரியாக இருந்தாலும் அதற்குப் பின்னால் உள்ள மெய் சத்தியத்தை இன்னும் யாரும் அறிந்த பாடில்லை. வெறும் சண்டையும் பிவினையுமே மிச்சம். மெய்ன் லைன் சபைகளும் வயது சென்றோரை முழுக்குகிறார்கள் சிறு குழந்தைகளை தெளித்து ஸ்நானம் கொடுக்கிறார்கள். மறு சாரார் (பெந்தேகோஸ்தே) அனுசரிக்கும் முழுக்கு ஞானஸ்நானம் என்பது அவர்களின் வழிமுறையாக அல்லது வழக்கமாக உள்ளது அவ்வளவுதான் வித்தியாசம். ஒட்டு மொத்தமாக பார்ப்போமானால் ஒருவர் செய்வது பாரம்பரியம் அடுத்தவர் செய்வது அவர்களின் வழக்கம், அவ்வளவுதான்.

இந்த சாக்கிரமந்துக்கு பின்னணியத்தில் உள்ள "கிறிஸ்துவோடு அடையாளப்படுத்துதல்" என்னும் சத்தியத்தை யாரும் அதிகமாக அறிந் பாடில்லை. அறிந்துகொள்ள விருப்பமும் இருந்த மாதிரி தெரிய வில்லை. சாகிரமந்தை வெளியரங்கமாக அனுசரிப்பதில்தான் வித்தியாசமே ஒழிய; சத்தியத்தை கடைப்பிடிப்பதில் இல்லை. தண்ணீரின் அளவில்தான் வித்தியாசமே ஒழிய வேதத்தின் மெய் சத்தியத்தின் படி எந்த வளர்ச்சியும் காணப்படவில்லை.

ஒருவருடைய சாட்சி: நான் என்னுடைய காலேஜ் படிப்பில் தேர்வில் தோழ்வியடைந்தேன். பின்பதாக ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றேன். அங்கே பாஸ்டர் சொன்னார் நீ சி. எஸ். . சபைக்கு செல்லுகிறாய். அவர்கள் கொடுக்கும் ஸ்நானம் மிகவும் தவறானது, நீ தண்ணீரில் முங்கி ஸ்நானம் எடுக்க வேண்டும். அப்படி செய்தால் பாஸ் ஆகி விடுவாய் என்று சொன்னார். அவ்வாரே கடைபிடித்தேன். அடுத்த முறை நான் தேர்வில் பாஸ் ஆகி விட்டேன். நான் கேட்ட சாட்சியை மிகவும் சுருக்கமாக இங்கே கொடுத்திருக்கிறேன்.

இந்த சாட்சியை பற்றி நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்.

பாஸ்டரின் அறிவுரை சரியா என்று

ஞானஸ்நானம் எதற்காக எடுக்க வேண்டும் என்று

உலகத்தின் ஆசிவாதத்திற்க்காக ஸ்நானம் எடுப்பது சரியா என்று


......வளரும் மெதுவாக

No comments:

Post a Comment